
பதில், “2020-21 நிதியாண்டில், பெண்கள் தலைமையிலான SMEகளின் எண்ணிக்கை 4.9 லட்சமாக இருந்தது. 2021-22 நிதியாண்டில் பெண்கள் தலைமையிலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை 8.59 லட்சமாக அதிகரித்துள்ளது.
உத்யம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பெண்கள் தலைமையிலான நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார். நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை பெண்கள் ஏற்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தி வருவதால் இது ஒரு பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, மார்ச் 31, 2021 நிலவரப்படி, இந்திய வங்கிகளில் மொத்தம் 211.65 கோடி கணக்குகள் உள்ளன. பெண்களின் கணக்குகள் 70.64 கோடி என்று அமைச்சர் பானு பிரதம் சிங் வர்மா தெரிவித்தார்.