தமிழகம்

சிட்டுக்குருவிகள் மீது இரக்கம்: மாணவர்களுக்கு கூடுகளை வழங்குதல்


சூலூர்: சிட்டுக்குருவிகள் அடைக்க பள்ளி மாணவர்களுக்கு கூடு வழங்கப்பட்டது. சூலூரை அடுத்த கலங்கல் கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சுற்றுப்புற பகுதியில் ஏராளமான பறவை இனங்கள் உள்ளன. வனத்துறை சார்பில் ஆயிரக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கலங்கல் வன அமைப்பு, தாய் மண் பாதுகாப்பு அறக்கட்டளை, உரம், சூலூர் பசுமை நிழல், தங்கம்மாள் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களை பாதுகாக்க திட்டமிட்டனர். முன்னாள் மேலாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சுமதி முன்னிலை வகித்தார்.
தாய் மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம் தாவரவியலாளர் மாணிக்கம், விஜயகுமார், முத்துக்குமார், சண்முகம் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியை கலங்கல் வன ஒருங்கிணைப்பாளர் அன்புராஜ் ஒருங்கிணைத்தார். பறவைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விளம்பரம்Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.