தேசியம்

சாவர்க்கர் நீக்கம், பெரியார் சேர்ப்பு: கன்னூர் பல்கலையில் புதிய பாடத்திட்டம்


கேரள மாநிலம், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் முதுகலை எம்.ஏ. நிர்வாகி மற்றும் அரசியல் படிப்புக்கான திருத்தப்பட்டப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், திராவிட தேசியம் என்ற பெயரில் பெரியார் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டங்களை கல்வியியல் குழு மாற்றியுள்ளது. அதன்படி தற்போது முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்பில் இடம்பெற்ற சங்பரிவார், தீந்தயாள் உபாத்யாய், பல்ராஜ் மதோக் உள்ளிட்டோர் தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி: அரசு எடுத்துள்ள நல்ல முடிவு

இதற்கு பதிலாக தற்போது நவீன அரசியல் சிந்தனையில் தேசமும் தேசியமும் என்ற தலைப்பில், சாவர்க்கர், கோல்வாக்கர், முகமது அலி ஜின்னா, மெளலான அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோரின் கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் திராவிட தேசியம் என்ற பெயரிலான பாடலில் தந்தை பெரியாரின் கருத்துக்களும் இதில் இடம் பெற்றுள்ளன. அதே சமயம் இந்த புதிய பாடத்திட்டத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ராம் மனோகர் லோஹியா ஆகியோரைக் குறித்த கருத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இந்த பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் முதுகலை நிர்வாகவியல்படிப்பிற்கான மூன்றாவது செமஸ்டர் பாடத்திட்டத்தில் காந்தியடிகள், நேருவுடன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் களான கோல்வால்கர், வீர் சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்யாயா வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இது குறித்து விசாரிக்க குழு அமைத்திருப் பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ASLO படிக்கவும் மாநில அரசிற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிரவும்

முகநூலில் @ஜீ ஹிந்துஸ்தான் தமிழ் மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பார்க்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டு பதிவிறக்கங்கள்.

Android இணைப்பு: https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு: https://apple.co/3loQYeR

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *