
இஸ்லாமாபாத்: தனக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக இன்று நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும் என பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.
அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமரும், பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பார்லியில் கடந்த 28ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில், தனியார் ‘டிவி’ மூலம் மக்கள் மத்தியில் இம்ரான்கான் பேசியதாவது: என் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எப்படி சமாளிப்பது என்று திட்டமிட்டு வருகிறேன். நாட்டு மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். இதே நிலை மற்ற நாடுகளில் ஏற்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் போராடியிருப்பார்கள். அதேபோல் பாகிஸ்தானிலும் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும்.
பாகிஸ்தானில் இம்ரான் கான் நாட்டு மக்களை போராட்டத்தில் ஈடுபட வலியுறுத்தி வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
விளம்பரம்