National

சந்திரசேகர ராவ் மீது பாஜக தலைவர் புகார் | BJP leader complains against Chandrasekhara Rao

சந்திரசேகர ராவ் மீது பாஜக தலைவர் புகார் | BJP leader complains against Chandrasekhara Rao


ஹைதராபாத்: தெலங்கானா மாநில பாஜக தலைவரும் மத்திய இணை அமைச்சருமான கிஷண் ரெட்டி,ஹைதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தெலங்கானா தேர்தலில் முதல்வர் சந்திர சேகரராவ் முதலில் கஜ்வேல் தொகுதியில் மட்டுமே போட்டியிட நினைத்தார். அங்கு பாஜக சார்பில் ஈடலராஜேந்தர் இவரை எதிர்த்து போட்டியிட்டதால், தோல்வி பயம் வந்து காமாரெட்டி தொகுதியிலும் போட்டியிடுகிறார். கஜ்வேல் தொகுதியில், இவரை எதிர்த்து 113 பேரும் காமாரெட்டி தொகுதியில் 57 பேரும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், சந்திரசேகர ராவ் போலீஸாரின் உதவியோடு எதிர்க்கட்சி வேட்பாளர்களில் சிலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேட்பு மனுவை வாபஸ் பெறுமாறு மிரட்டி உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *