National

“சத்தீஸ்கரில் 75+ இடங்களில் காங்கிரஸ் வெல்லும்” – முதல்வர் பூபேஷ் பாகல் நம்பிக்கை | Will Win Over 75 Seats In Chhattisgarh says Bhupesh Baghel

“சத்தீஸ்கரில் 75+ இடங்களில் காங்கிரஸ் வெல்லும்” – முதல்வர் பூபேஷ் பாகல் நம்பிக்கை | Will Win Over 75 Seats In Chhattisgarh says Bhupesh Baghel


புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைக்கும் என முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு நவ.7-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் 17-ம் தேதி இரண்டாவது கட்டமாக மீதமுள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிச.3-ம் தேதி நடைபெறும்.இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிவருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளியத்தார். அப்போது பேசிய அவர். “காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைக்கும். அதாவது 2018 ஐ விட 75 இடங்களுக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெறும். இந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது கோவிட் தொற்று காலத்திலும், அதற்கு பிறகும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடியினர், வணிகர்கள் என யாராக இருந்தாலும், கோவிட் தொற்று காலத்தில் அனைவருக்கும் ஆதரவளித்தோம். மக்கள் காங்கிரஸ் ஆட்சியை மட்டுமே நம்புகிறார்கள்.

நாங்கள் அளிக்கும் வாக்குறுதியையையும் நம்புகிறார்கள். ஆனால் மோடியின் வாக்குறுதிகளை நம்பவில்லை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி உட்பட ஒவ்வொரு வாக்குறுதியையும் காப்பாற்றி இருக்கிறோம்” என்றார். மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும். இந்த நிதி அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *