மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கருக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மிகச் சிறந்த தொழில்நுட்ப ஆட்டக்காரர் (டெக்னிக்கல்) சச்சின் டெண்டுல்கர் என்று முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி கூறியது மிகவும் சரியானது. கிரிக்கெட்டின் 3 வகையான வடிவங்களிலும் நான் பார்த்த வீரர்களிலேயே மிகவும் சிறந்தவர் சச்சின்தான் என்றும், டெக்னிக்கலாக மிகச் சிறப்பாக விளையாடியவர் என்றும் ரவி சாஸ்திரி கூறியது மிகவும் சரியே. கிரிக்கெட்டின் மிகச் சிறந்த ஆட்டக்காரர்களில் சச்சினும் ஒருவர். அதை நான் நேரில் பலமுறை கண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.