Sports

கேலோ இந்தியா விளையாட்டு நிறைவு விழா: மத்திய அமைச்சர் பங்கேற்பு ; தமிழகம் இரண்டாமிடம்

கேலோ இந்தியா விளையாட்டு நிறைவு விழா: மத்திய அமைச்சர் பங்கேற்பு ;  தமிழகம் இரண்டாமிடம்




சென்னை: சென்னையில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அனுராக்சிங்தாக்கூர் கலந்து கொண்டார்.

சென்னையில் கடந்த 19 ஆம் தேதி முதல் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது. துவக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவி. மத்தியஅமைச்சர் முருகன் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதன் அடிப்படையில் மாநில பதக்க பட்டியலில் மகாராஷ்டிரா156 பதக்கங்கள் பெற்று முதலிடம் பெற்றது. தொடர்ந்து தமிழ்நாடு 97 பதக்கங்களுடன் இரண்டாம் இடமும்,அரியானா மாநிலம் 103 பதக்கங்களுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் இன்று (31-ம் தேதி) நடைபெற்ற போட்டிகள் நிறைவுவிழாவில் மத்திய அமைச்சர் அனுராக்சிங்தாக்கூர் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சருக்கு அமைச்சர் உதயநதி திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கினார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் கடந்த ஆண்டு தமிழகம் 7-வது இடத்தை பிடித்திருந்த நிலையில் முதன் முறையாக தற்போது இந்தாண்டு இரண்டாம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடந்து உதயநிதி பேசியது, விளையாட்டு துறை தலைநகராக தமிழ்நாடு மாறியுள்ளது. விளையாட்டில் திறமையானவர்களை கண்டறிந்து உரிய பயிற்சியை அரசு வழங்கியது. 13 நாட்களாக நடந்த போட்டிகளில் 5400 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *