10/09/2024
National

கேதார்நாத் | கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து | Helicopter being airlifted crashes near Kedarnath as towing rope snaps

கேதார்நாத் | கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து | Helicopter being airlifted crashes near Kedarnath as towing rope snaps


கேதார்நாத்: கேதார்நாத் அருகே கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

கிறிஸ்டல் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று உத்தராகண்ட்டில் விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரை உத்தராகண்ட்டில் உள்ள கோச்சார் விமான நிலையத்துக்குக் கொண்டு செல்வதற்காக ராணுவத்துக்குச் சொந்தமான MI-17 ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.

ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து கயிறு கட்டி விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் வான் வழியாக தூக்கிச் செல்லப்பட்டது. நடுவானில் கயிறு அறுந்ததை அடுத்து தூக்கிச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கேதார்நாத் அருகே கீழே விழுந்து நொறுங்கியது.

இதையடுத்து, மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *