மாஸ்டர் பிளாஸ்டர் என்ற பட்டம் கிரிக்கெட்டுக்கு சூப்பர் பேட்டர்களுக்கு ஒரு அதிகாரப்பூர்வமற்ற செல்ல பட்டப்பெயர் வழங்கப்படும். டான் பிராட்மேனில் தொடங்கி நமக்குத் தெரிந்த அளவில் பாரி ரிச்சர்ட்ஸ், விவ் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில், ஆடம் கில்கிறிஸ்ட், ஜெயசூரியா, சேவாக் உள்ளிட்ட அதிரடி அசகாய சூர ஹிட்டர்களைக் குறிக்கப் பயன்படுத்தலாம். ஆனால் அசல் மாஸ்டர் பிளாஸ்டர் ஒருவர் இறந்துவிட்டார்.
அவர்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த பெர்சி ஜார்ஜ் ஹெர்பர்ட் ஃபெண்டர். இவர் ஆகஸ்ட் 22, 1822-ல் லண்டனில் பிறந்தவர். 92 வயது வரை வாழ்ந்து ஜூன் 15, 1985-ல் மரணமடைந்தார். இவர் ஒரு வலது கை பேட்டர். இவர் 13 டெஸ்ட் போட்டிகளில் 380 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 60. நீண்ட காலம் இவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீடிக்க முடியவில்லை. சர்ரே, சசெக்ஸ் அணிகளை வழிநடத்தியுள்ளார். இவர் காலத்தில் இவர்தான் மிகவும் கெட்டிக்கார கேப்டன் என்று பெயரெடுத்தவர்.
இவர் முதல் தர கிரிக்கெட்டில் 26 ஆண்டுகள் ஆடியுள்ளார். 19034 ரன்களை குவித்துள்ளார். 21 சதங்களையும் 102 அரைசதங்களையும் எடுத்துள்ளார். 602 கேட்ச்களை எடுத்துள்ளார். இவர் 1920-ம் ஆண்டில் சர்ரே அணியின் கேப்டனாக இருந்தபோது நார்தாம்டன் ஷயர் அணிக்கு எதிராக 35 நிமிடங்களில் சதம் கண்டு அசத்தியுள்ளார். அப்போது பந்துகள் கணக்கு பதிவாகாத காலம். எனவே கிரீசில் செலவழித்த நேரம்தான் கணக்கு, அதில் 1920-ல் 35 நிமிடங்களில் சதமடித்து உலக சாதனை புரிந்தார்.
முன்னதாக 1897-ம் ஆண்டு ஜெசாப் என்ற இங்கிலாந்து கவுண்டி வீரர் 40 நிமிடங்களில் அடித்த சாதனையையும் 1905-ல் ஹார்ன்பி என்ற கவுண்டி விரர் 40 நிமிடங்களில் சதமெடுத்த சாதனையையும் 1907 ஆம் ஆண்டு மீண்டும் அதே ஜெசாப் 42 நிமிடங்களில் சதமெடுத்த சாதனையையும் இவருக்கு ஒட்டுமொத்தமாக முறியடித்தார். இவரது இந்த 35 நிமிட சாதனையை லங்காஷயரின் டெயில் எண்டர் ஸ்டீவ் ஓஷாக்னெஸ்ஸி 1983-ம் ஆண்டு சமன் செய்தார்.
ஃபெண்டர் மிகப்பெரிய கேப்டன் என்று போற்றப்பட்டவர். அவர்தான் இங்கிலாந்தை வழிநடத்த வேண்டும் என்று பலரும் கருதினர். ஆனால் இவர் காரியர் மிகச்சுருக்கமாக 13 டெஸ்ட் போட்டிகளுடன் முடிந்து போனது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு பேரிழப்பே! தற்போது குறைந்த நிமிடங்களில் சதமெடுத்த சாதனையை வைத்திருப்பவர் கிளென் சாப்ளி இவர் 1993 ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டியில் 21 நிமிடங்களில் சதமெடுத்து உலக சாதனையை தக்க வைத்துள்ளார்.