Business

காதலர் தினத்தையொட்டி சிறப்பு ஆஃபர்களை அறிவித்த ரியல்மீ!

காதலர் தினத்தையொட்டி சிறப்பு ஆஃபர்களை அறிவித்த ரியல்மீ!


இந்தியாவில் காதலர் தினத்தை ஒட்டி ரியல்மீ சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த விற்பனையின் போது Narzo சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்க உள்ளது. மேலும் இந்த சேல் அமேசான் இந்தியா வெப்சைட் மற்றும் Realme.com இல் பிப்ரவரி 6 தொடங்கி பிப்ரவரி 12 முடிவடைகிறது. இந்த சிறப்பு விற்பனையின்போது Realme Narzo 60x 5G, Realme Narzo N55, மற்றும் Realme Narzo N53 போன்ற realme 4 ஸ்மார்ட்போன்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. சமீபத்திய மாடல்களான Realme Narzo 60 Pro 5G மற்றும் Realme Narzo 60 5G வரக்கூடிய விற்பனையில் விலை குறைப்பை உறுதிப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி ரியல்மீயின் காதலர் தின சலுகையானது Amazon.in மற்றும் Realme.com இல் பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு துவங்கியது. இந்த சலுகையில் பல்வேறு நார்சோ சீரிஸ் போன்களுக்கு எக்கச்சக்கமான டிஸ்கவுண்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB RAM +1TB ஸ்டோரேஜ் வேரியண்டுகள் கொண்ட Realme Narzo 60 Pro 5G ஸ்மார்ட்போன் வாங்கும் கஸ்டமர்களுக்கு 2000 ரூபாய் கூப்பன் டிஸ்கவுண்ட் வழங்கப்பட உள்ளது. மேலும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வெர்ஷன் வாங்கும் நபர்களுக்கு 4000 ரூபாய் மதிப்புள்ள டிஸ்கவுண்ட் கூப்பன் கிடைக்கும். கூடுதலாக வங்கி சலுகைகளை பயன்படுத்தி 2000 ரூபாய் மதிப்பிலான டிஸ்கவுண்டுகளையும், கஸ்டமர்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்டுகளை பயன்படுத்துவதன் மூலமாக ஸ்மார்ட்போன்களின் ஆரம்ப விலை. 21,999 ஆக உள்ளது.

விளம்பரம்

Realme Narzo 60 5G இன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடலை அசல் விலையான 17,999 ரூபாயிலிருந்து 14,999 என்ற டிஸ்கவுண்ட் விலையில் வாங்கிக் கொள்ளலாம். மேலும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட அடுத்த வெர்ஷனை 19,999 ரூபாய்க்கு பதிலாக 16,999 ரூபாய் கொடுத்து வாங்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவில் நடைபெற உள்ள ரியல்மீயின் காதலர் தின சிறப்பு விற்பனையின் போது Realme Narzo 60x 5G ஸ்மார்ட்போனின் விலை 10,999 ரூபாயாக உள்ளது. இது இந்த போனின் வழக்கமான விலையை விட 2000 ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல Realme Narzo N55 ஸ்மார்ட் போனின் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வெர்ஷன் 12,999 ரூபாய்க்கு பதிலாக ரூ.8,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

Also Read | 
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

Realme Narzo N53 ஸ்மார்ட்போனின் 4GB RAM+64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 8,999 ரூபாய்க்கு பதிலாக 7,499 ரூபாய் விலையில் கிடைக்கிறது. அதே நேரத்தில், 8GB RAM +128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 11,999 ரூபாய் விலையில் இருந்து குறைக்கப்பட்டு 9,499 ரூபாய்க்கு கிடைக்கிறது.

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *