
பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து அரசு போட்டித் தேர்வுகள் எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கர்நாடகாவில் கடந்த 6-ம் தேதி மாநில அரசின் பணியாளர் தேர்வாணையம் சார்பில் போட்டித் தேர்வு நடைபெற்றது. இதில் தலைப்பாகை, ஹிஜாப், தாலிஉள்ளிட்டவை அணிந்து தேர்வு எழுதஅனுமதி மறுக்கப்பட்டது.
மைசூருவில் தாலியை அகற்றிவிட்டுபெண் பட்டதாரிகளை, தேர்வு மையத்துக்குள் அனுமதித்தது குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அரசுக்குஎதிராக ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, கர்நாடக பணியாளர் தேர்வாணையம் புதிய விதிமுறை அறிவித்துள்ளது. அதில், “இனி தேர்வு மையங்களில் தலைப்பாகை, ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை. தேர்வில்ஒழுங்கீன நடவடிக்கைகளை தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தாலி, கழுத்து சங்கிலி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து தேர்வுஎழுத அனுமதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து தனியார் கல்லூரி பேராசிரியர் உமைனா பேகம்கூறும்போது, “கடந்த பாஜக ஆட்சியில்பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், இப்போது ஆளும்கட்சியானதும் அதே நடவடிக்கையை மேற்கொள்கிறது” என்றார்.