தமிழகம்

கரூர் பள்ளியில் கெட்டுப்போன முட்டை விநியோகம்: தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்


கரூர்: கரூரில் மாணவர்களுக்கு கெட்டுப்போன முட்டை வழங்குவதை முறையாக கண்காணிக்காத சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் தலைமை ஆசிரியர் பணி நீக்கம்! மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள நாகனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் நேற்று சமைத்து மாணவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த முட்டைகள் அழுகியும், புழுக்களுடன் கெட்டுப்போனதுமாக காணப்பட்டது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்களின் பெற்றோர் முறையிட்ட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில், அதில் புழுக்கள் இருந்த காட்சி இரண்டு மாதங்களுக்கு முன் வைரலானது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், இன்று (டிச.25) சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று சத்துணவுக்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், மாணவர்களுக்கு கெட்டுப்போன முட்டை வழங்கிய விவகாரத்தில், பணியை கவனிக்க தவறிய பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் தேன்மொழி, சமையலர் லெட்சுமி, பள்ளி முதல்வர் தனலட்சுமி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *