
எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படம், ‘கன்னித்தாய்’. அவருடன், ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, நம்பியார், அசோகன், நாகேஷ் உட்பட பலர் நடித்திருப்பார்கள்.
இந்தப் படத்துக்கு முன் நடிகை சரோஜாதேவியின் அம்மாவுக்கும் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவருக்கும் பிரச்சினை. ஒரு கட்டத்தில், என் படங்களில் சரோஜாதேவி நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் தேவர். இதனால் எம்.ஜி.ஆருக்குச் சரியான நாயகியைத் தேடி வந்தார். அப்போது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஜோடியை புதிதாகப் பார்த்துவிட்டு ரசித்த அவர், ‘கன்னித்தாய்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க வைத்தார் ஜெயலலிதாவை.