
படிக்க நேரமில்லையா? செய்தியைக் கேளுங்கள்
கனடா – டொராண்டோவில் இந்திய வம்சாவளி மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள கல்லூரிகளில், ஏராளமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் கார்த்திக் வாசுதேவ் (21) என்பவர் டொராண்டோவில் உள்ள செனிகா கல்லூரியில் படித்து வந்தார். இவர் கடந்த 7ம் தேதி மாலை செயின்ட் ஜேம்ஸ் டவுன் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் கார்த்திக்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். காயமடைந்த கார்த்திக் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தாக்குதல் நடத்திய நபரை தேடும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
![]() |
அங்குள்ள இந்திய தூதரகம் கார்த்திக்கின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளது. இந்நிலையில், மறைந்த கார்த்திக் வாசுதேவ் மறைவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விளம்பரம்