National

கட்டுக்கட்டாக நோட்டுகளுடன் சத்தீஸ்கர் காங்கிரஸ் எம்எல்ஏ | Chhattisgarh Congress MLA with currency notes

கட்டுக்கட்டாக நோட்டுகளுடன் சத்தீஸ்கர் காங்கிரஸ் எம்எல்ஏ | Chhattisgarh Congress MLA with currency notes


ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏ ராம்குமார் யாதவ், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டில் வசிக்கிறார். இவரது தாய், தந்தை, குடும்பத்தினர் ஆடு, மாடுகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் எம்எல்ஏ ராம்குமார், கட்டுக்கட்டாக ரூபாய்நோட்டுகளுடன் இருக்கும் வீடியோவை பாஜக பொதுச்செயலாளர் ஓ.பி.சவுத்ரி நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் ராம்குமார் சோபாவில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்பு இருக்கும் படுக்கையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் உள்ளன. அவருடன் சிலர் பேசிக் கொண்டு இருக்கின்றனர்.

இதுகுறித்து பாஜக பொதுச்செயலாளர் ஓ.பி. சவுத்ரி கூறும்போது, “ராம்குமார் எம்எல்ஏ தன்னை ஏழை என்று கூறுகிறார். ஆனால் அவர் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளுடன் இருக்கிறார். இந்த வீடியோ குறித்து சிபிஐ விசாரணை நடத்த முதல்வர் பூபேஷ் பாகெல் பரிந்துரை செய்வாரா? மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளிலும் ஊழலில் ஈடுபட்டு வருகிறது. சத்தீஸ்கரை சேர்ந்த 20 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகள் துபாயில் இருந்து கையாளப் படுகின்றன” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்எல்ஏ ராம்குமார் யாதவ் கூறும்போது, “எனதுநற்பெயருக்கு களங்கம் விளைவிக்க மார்பிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்” என்றார்.





Source link

About Author

tamilnewspapper.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: