National

கடன் வாங்கும் உச்சவரம்பு வழக்கு; 5 நீதிபதி அமர்வை விரைவில் அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு | Supreme Court To Set Up Bench To Hear Kerala Petition Against Borrowing Cap

கடன் வாங்கும் உச்சவரம்பு வழக்கு; 5 நீதிபதி அமர்வை விரைவில் அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு | Supreme Court To Set Up Bench To Hear Kerala Petition Against Borrowing Cap


புதுடெல்லி: கடன் வாங்குவது தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் நிகர கடன் மீதான உச்சவரம்பு தொடர்பாக மத்திய அரசுக்குஎதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி பரிந்துரை செய்தது.

இதுவரை அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படாத நிலையில், அதனை விரைவில் நிறைவேற்ற கோரி கேரள அரசு நேற்று மனு தாக்கல் செய்தது.

இந்த மனு தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மாற்றப்பட்டது. ஆனால், இதுவரை உச்ச நீதிமன்ற அதிகாரி இது தொடர்பாகமின்னஞ்சல் எதுவும் அனுப்பவில்லை” என்றார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி சந்திசூட் கூறுகையில், “ இந்த விவகாரத்தை நான் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன்” என்றார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *