தேசியம்

கஞ்சாவுக்கு அடிமையான மகனுக்கு அம்மா கொடுத்த ‘ட்ரீட்மெண்ட்’


ஒரு தவறில் இருந்து திருந்திக்கொள்வதற்கு தண்டனைகள் மட்டுமே போதுமானதா ? என்ற விவாதம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தண்டனைகள் தவறிழுத்தவர்களை மேலும் குற்றம் செய்ய தூண்டக்கூடியதாக மாறுவதாக ஒரு தரப்பு தனது வாதத்தை முன்வைக்கிறது. தண்டனைகள் இல்லை என்றால் அகிம்சை வழியில் திருந்தக்கூடிய தண்டனைகளில் மற்றொரு தரப்பின் வாதம் உள்ளது. எதுவாகினும், குற்றங்கள் மட்டும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதற்கான தண்டனைகளும் கொடுக்கப்பட்டுத்தான் வருகின்றன. சில சமயம் நீதிமன்றங்கள் மூலமும், சில சமயம் தன்னிச்சையாகவும்!

மேலும் படிக்க | தாயின் இரண்டாவது திருமணத்தை பெருமையாக கொண்டாடிய மகள்!

தெலங்கானா மாநிலம் கொத்தாடா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கஞ்சாவுக்கு அடிமையானார். இதனால் வேதனையடைந்த அவரது தாய் தினமும் மகனிடம் அறிவுரை கூறியிருக்கிறார். ஆனாலும் இந்தப் பழக்கத்தை அவரது மகன் விடாமல் கஞ்சா அடித்தபடி இருந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கஞ்சா அடித்துவிட்டு வந்த மகனை, எதிரில் உள்ள தூணில் அவரது தாய் கட்டிப்போட்டார். மகனின் கண்களில் மிளகாய் பொடி தூவி, ‘திருந்துவியா… திருந்துவியா’ என ஆவேசமாக கேட்கிறார். எரிச்சலில் அவரது மகன் அலறியபடி சத்தம் போடும் இந்தக் காட்சி காண்போரை அதிர்ச்சியடையச் செய்தது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தகவல் அறிந்த சூரியாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாய், மகன் ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | 46 வயதில் தாயான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.

முகநூலில் @ZEETamilNewsடிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிகிராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.