வணிகம்

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: நாடு முழுவதும் டெலிவரி!


இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் புதிய மின்சார வாகனங்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஓலா நிறுவனத்தின் சார்பில் எஸ்1, S1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்தவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் விநியோகம் தொடங்கியது. முன்னதாக வழங்குவதாக அறிவிக்கப்பட்ட செமிகண்டக்டர் பற்றாக்குறையால் உற்பத்தி தாமதமாகி விநியோகம் தாமதமானது. முதல் கட்டமாக, நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள 100 வாடிக்கையாளர்களுக்கு ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்பட்டன.

499 ரூபாய்க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்… டெலிவரி தேதி அறிவிப்பு!
இந்நிலையில், ஓலா ஸ்கூட்டர்களை இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு டெலிவரி செய்யும் அடுத்த கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்த தகவலை ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்கூட்டர்களுக்கான டெலிவரி தொடர்வதால் மகிழ்ச்சியடைந்த ஓலா, இத்தனை நாட்களாக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

பிரேக்கிங் சிஸ்டம், சார்ஜிங் பாயின்ட், ப்ளூடூத், வைஃபை, கடிகாரம், டிஜிட்டல் ட்ரிப் மீட்டர், ஸ்பீடோமீட்டர், ஓலா ஆப் இணைப்பு, ஃபைண்ட் மை ஸ்கூட்டர், க்ரூஸ் கன்ட்ரோல், நேவிகேஷன், எலக்ட்ரானிக் ஸ்டீயரிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *