வணிகம்

ஓய்வூதியம் உயர்வு.. அரசு எடுக்கும் முக்கிய முடிவு!


விரைவில் பென்சன் வாங்குபவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) பயனாளிகளுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை விரைவில் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூட்டம் பிப்ரவரி மாதம் நடைபெறும். குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது முக்கிய முடிவு. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிப்பதே கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலாகும்.

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது ஏற்கனவே பல கட்டங்களில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார காருக்கு ரூ.1.5 லட்சம் சலுகை.. செம ஜாக்பாட்!
தொழிலாளர் அமைச்சகத்தின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைகள் குறித்து முடிவு எடுக்கப்படும். இந்தக் கூட்டத்தில் குறைவு பென்சன் உயர்வு, புதிய ஊதியச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.

மார்ச் 2021 இல், நாடாளுமன்ற நிலைக்குழு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000-லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த பரிந்துரைத்தது. எனினும், ஓய்வூதியர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 9,000 ரூபாயாக அதிகரிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *