தேசியம்

ஓணம் பண்டிகை: ஓணம் பண்டிகையொட்டி கேரள மக்களுக்கு ரூ. 1000 பரிசுத்தொகை அறிவிப்பு


ஓணம் பரிசு: கேரள மக்கள் சாதி, மத, இனம் என்ற பேதமின்றி அனைவரும் சேர்ந்து ஓணம் பண்டிகையை (ஓணம் பண்டிகை) ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். ஓணம் பண்டிகை கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி தொடங்கியது. இது வருகிற 23 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

தொடர்ந்து ஓணம் பண்டிகையொட்டி அங்குள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ 1000 பரிசுத் தொகையினை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் (பினராயி விஜயன்) தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

சமூகப் பாதுகாப்பு மற்றும் நலநிதி ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு கேரள அரசு அறிவித்துள்ள இந்த ஓணம் பரிசுத்தொகை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

பிபிஎல் மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டங்களில் இருக்கக் கூடிய 14 லட்சத்து 78 ஆயிரத்து 236 குடும்பங்களுக்கு இந்த உதவித் தொகை சென்று சேரும். இந்த திட்டத்திற்காக கேரள அரசு ரூ .147 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக பயனாளிகளின் பட்டியல் மாவட்ட வாரியாக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கூட்டுறவுப் பதிவாளர்களுக்கு வழங்கப்படுகிறது என கேரள அரசு வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | கேரளா மக்களால் கோலாகலமாக கொண்டாடும் ஓணம் பண்டிகை …

பருவ மழைக்காலம் முடிந்து கேரளத்தில் எங்கும் பசுமை பூத்திருக்கும் காலத்தில் ஓணம் கொண்டாடப்படுவது வழக்கம். சாதி-மத பேதமின்றி கேரள மக்களால் கொண்டாடப்படும் விழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா பத்தாம் நாளான திருவோணத்தில் நிறைவுபெறும். 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிரவும்

முகநூலில் @ஜீ ஹிந்துஸ்தான் தமிழ் மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் !!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G
ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *