
சமீபத்தில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் விருது பெற்றவர்கள் யார் என்கிற செய்தியை விட விறுவிறுப்பாக பரவிய செய்தி விழா மேடையில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் அறைந்த செய்தி தான். வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட்டின் தலையை பற்றி கேலி செய்ததால் கிறிஸ் ராக்கை மேடையேறி சென்று வில் ஸ்மித் அறைந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதன் பின் சில நிமிடங்களிலேயே நடிகர் வில் ஸ்மித்திற்கு கிங் ரிச்சர்ட் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்த செய்திகள் இணையத்தில் தீயாய் பரவ வில் ஸ்மித் செய்தது சரி என்று ஒரு கும்பலும், அவர் செய்தது தவறு என்று ஒரு கும்பலும் மாறி மாறி கருத்து தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | எப்படி இருக்கிறது Marvel-ன் Morbius திரைப்படம்? – திரைவிமர்சனம்!
தான் செய்தது தவறு என்று வில் ஸ்மித் மன்னிப்பு கோரியும் சிலர் இவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் திடீரென ஸ்மித் அகாடெமி மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் எனது செயலால் கிறிஸ்து மட்டுமல்ல அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் என பலரும் வேதனை அடைந்துள்ளனர் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். தற்போது நொடிப்பொழுதில் இவர் தன்னிலை மறந்து செயலால் இவரது கேரியருக்கு பாதிப்பு இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்மித் நடிப்பில் உருவாகும் நெட்ப்ளிக்சின் படமான ‘ஃபாஸ்ட் அண்ட் லூஸ்’ படத்தின் பணிகளுக்கு சில தடை ஏற்பட்டுள்ளது. ஒரு தாக்குதலுக்கு பிறகு கொள்ளைக்கூட்ட தலைவனுக்கு ஞாபக மறதி ஏற்பட்டு விடுகிறது, அதன்பிறகு அவன் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கிறது என்பது கதைக்களமாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் முதலில் இருந்து இயக்குனர் விலகினார், தற்போது வில் ஸ்மித் செய்த செயலால் இப்படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து வில் ஸ்மித்திற்கு பேட் பாய்ஸ்-4 க்கான 40 பக்கம் கொண்ட ஸ்கிரிப்ட் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அப்படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல தரப்பிலிருந்தும் நன்மதிப்பை பெற்றிருந்த இவரது பெயர் தற்போது மிகவும் மோசமானதாக மாறியுள்ளது.
மேலும் படிக்க | அடிச்சது தப்புதான், கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கோரிய வில் ஸ்மித்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.
முகநூலில் @ZEETamilNewsடிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிகிராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G
ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR