உலகம்

ஒரு சில செய்தி வரிகளில்


‘கேமரா’வுடன் பறக்கும் ராக்கெட்

பெய்ஜிங்: விண்வெளித் துறையை மேம்படுத்தும் முயற்சிகளில் நமது அண்டை நாடு சீனா கவனம் செலுத்தி வருகிறது. சீன தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் நேற்று விண்வெளியில் தெளிவான படங்களை எடுக்கும் உயர்தர ‘கேமரா’ கொண்ட Xiuan-1 – 02E செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. சான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் ஏவுதளத்தில் இருந்து ‘லாங் மார்ச் 4சி’ வகை ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

கோட்டைக்குள் நுழைந்தவர் கைது செய்யப்பட்டார்

லண்டன்: கொரோனா அச்சுறுத்தல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக வின்ட்சர் கோட்டையில், அவர் தனது மகன் இளவரசர் சார்லஸ் மற்றும் மருமகள் கமிலாவுடன் கொண்டாடினார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மர்ம நபர் ஒருவர் விண்ட்சர் கோட்டைக்குள் அத்துமீறி நுழைய முயன்றார். காவலர்கள் அவரைக் கைது செய்தனர்; அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

27 உடல்கள் சிக்கியுள்ளன

கெய்ரோ: ஆப்பிரிக்க நாடான லிபியாவில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இப்படி கடலில் பயணம் செய்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். லிபியாவின் கோம்ஸ் பகுதியில் ஒரு குழந்தை உட்பட 27 பேரின் உடல்கள் நேற்று மத்தியதரைக் கடலில் கரை ஒதுங்கியது. மேலும், மூன்று அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

விளம்பரம்

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *