
வாஷிங்டன்:அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், ஏப்., 2ம் தேதி இந்து புத்தாண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜியா மாநிலத்தில் இரண்டு லட்சம் இந்துக்கள் வசித்து வருவதாக ஜார்ஜியா கவர்னர் பிரையன் கெம்ப் அறிவித்துள்ளார். இந்த மாகாணத்தின் வளர்ச்சியில் இந்துக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கலாச்சாரம் மற்றும் பண்டிகைகள் முக்கியம்.
அதே போல இந்துக்கள் வசந்தத்தை கொண்டாடுகிறார்கள். எனவே ஏப்ரல் 2ம் தேதி இந்துக்களின் புத்தாண்டாக அங்கீகரிக்கப்படுகிறது என்றார். இந்நிலையில், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
வட அமெரிக்காவின் பீகார் மற்றும் ஜார்கண்ட் மக்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஹோலி கொண்டாட்டத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநில முதல்வர்கள் இவ்விழாவில் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர்.
விளம்பரம்