
புதுடெல்லி: 2022-23 நிதி ஆண்டுக்கு வருங்கால வைப்பு நிதிக்கு 8.15 சதவீதம்வட்டி வழங்கப்படுகிறது. தீபாவளி பண்டியையொட்டி இந்த வட்டி ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
எக்ஸ் தளத்தில் பிஎஃப் பயனாளர் ஒருவர், “இபிஎஃப்ஓ உரிய நேரத்தில் வட்டி வழங்கியதில்லை. நவம்பர் மாதம் தொடங்கியும் வட்டி வழங்கப்படவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த இபிஎஃப்ஓ, “பிஎஃப் வட்டியை வழங்க தொடங்கிவிட்டோம். விரைவிலேயே வாடிக்கையாளர்களின் கணக்கில் அது வரவாகும். வட்டி விடுபடாது. யாருக்கும் எந்த இழப்பும் இருக்காது. பொறுமையுடன் இருங்கள்” என்று தெரிவித்துள்ளது.
பிஎஃப் பயனாளர்கள் இபிஎஃப்ஓ இணையதளத்துக்குச் சென்று தங்களது கணக்கில் வட்டி வரவாகி உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.