தமிழகம்

உண்மையிலேயே இயற்கை விவசாயத்தில் அக்கறை இருந்தால் அதைச் செய்யுங்கள் பிரதமரே!


தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் பேசுகையில், ”இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்பு, இயற்கை விவசாயிகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களையும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வெறும் வாய்வீச்சுடன் நின்றுவிடக் கூடாது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் உணவுப் பற்றாக்குறையை மட்டுமே இலக்காகக் கொண்டு, கொடிய நோய்களை உண்டாக்கும் நச்சு இரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் இங்குள்ள விவசாயிகளை கடந்த 59 ஆண்டுகளாகப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள். இதனால், மனிதர்கள், கால்நடைகள், பறவைகள் மட்டுமின்றி, நன்மை செய்யும் பூச்சி இனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் மீதான அடிமைத்தனம், நம்பிக்கை, மோகம் ஆகியவற்றில் இருந்து இந்திய விவசாயிகள் மீண்டு வர, மத்திய அரசுகள் சில சிறப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

சுந்தர விமலநாதன்

ரசாயன இடுபொருட்களுக்கு மானியம் வழங்குவது போல் இயற்கை விவசாயிகளுக்கும் மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் மற்றும் விவசாய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில் நான்கு இடங்களில் இயற்கை வேளாண்மைப் பல்கலைக்கழகங்களை உருவாக்குவது முதல் படியாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் 10 இயற்கை வேளாண் கல்லூரிகளை உருவாக்க வேண்டும். அனைத்து தொடக்கக் கல்வி பாடத்திட்டங்களிலும் இயற்கை விவசாயம் இடம்பெற வேண்டும். இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கும், அவ்வாறு செய்ய விரும்புபவர்களுக்கும் உடனடியாக விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும். ஒவ்வொரு விவசாயி குடும்பத்திற்கும் ஒரு நாட்டு மாடு இலவசமாக வழங்கப்பட வேண்டும். நாட்டு மாட்டின் சாணம் மற்றும் சிறுநீர் மூலம் 12 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்யலாம்.

இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். இயற்கை வேளாண்மைத் துறைக்கென தனி அமைச்சகம் அமைத்து இதற்கான திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையிலேயே இயற்கை விவசாயத்தில் ஆர்வமும் அக்கறையும் இருந்தால், இவற்றையெல்லாம் செயல்படுத்த வேண்டும்; அப்போதுதான் இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்புவார்கள்,” என்றார்.

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *