உலகம்

இலங்கையில் வேலை நிறுத்தம்: ஆயிரம் தொழிற்சங்க பங்கேற்பு


கொழும்பு: இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகக் கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

1948 இல் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ளது.விலை உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பத்து மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இலங்கை அதிபரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வங்கிகள் மூடப்பட்டன. ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயங்கின.

ஊழியர்கள் வராததால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்திருப்பது அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.