உலகம்

இலங்கையில் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி; மசோதாவை நிறைவேற்றுதல்


படிக்க நேரமில்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: இலங்கையில் பெரும் பணக்காரர்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு மற்றும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. மேலும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். நாடாளுமன்றத்துக்கு முன்பாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான கூடுதல் வரி மசோதா இன்று (ஏப்.7) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சமீபத்திய தமிழ் செய்திகள்

கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில், வருமானத்தை அதிகரிப்பதற்காக பெரும் பணக்காரர்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் சட்டமூலத்தை பசில் ராஜபக்ச சமர்பித்திருந்தார். இந்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இலங்கை ரூபாவில் வருடாந்தம் 200 கோடி ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு மேலதிகமாக 25 வீதம் வரி விதிக்கப்படும். இந்த கூடுதல் வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.