உலகம்

இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன


படிக்க நேரமில்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு; இலங்கையில் அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் நேற்று (ஏப். 02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (ஏப். 04) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாட்டில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு, கோடை வெயிலில் மின்வெட்டு இலங்கை மக்களை வாட்டி வதைக்கிறது. தினமும், 13 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.

சமீபத்திய தமிழ் செய்திகள்

இதனால் இலங்கை அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாளிகைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதுடன் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இதனால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. மக்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில், கோத்தபாய ராஜபக்ச நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். நாட்டில் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.