உலகம்

இலங்கையர் ஒருவரை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவது கட்டாயமாகும்


கொழும்பு: இலங்கையில், உள்நாட்டவர்களை திருமணம் செய்ய விரும்பும் வெளிநாட்டினர், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

நமது அண்டை நாடான இலங்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சி அமைந்தது முதல், பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சில சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டினரை இலங்கையர்கள் திருமணம் செய்து கொள்வது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். இது தொடர்பாக, இலங்கை வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.

அந்த ஆலோசனை கூட்டத்தில், சட்டம் இயற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இலங்கையர்களை திருமணம் செய்ய விரும்பும் வெளிநாட்டவர்கள், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும்.

மேலும், கூடுதல் மாவட்டப் பதிவாளர் மூலமாக மட்டுமே இதுபோன்ற திருமணங்களை பதிவு செய்ய சட்டம் இயற்றப்பட்டது.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *