தேசியம்

இனி மாஸ்க் போடணுமா வேண்டாமா? இந்தியாவில் முடிந்தனவா கோவிட் 19 நிபந்தனைகள்


இந்தியா முழுவதும் குறைந்து வரும் கோவிட் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து, தொற்றுநோய் தொடங்கியது முதல் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முகக்கவசம் அணிவது மற்றும் தனி மனித இடைவெளி விதிமுறைகளை பராமரிப்பது தொடரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முகக்கவசங்களை அணிவது உட்பட தொற்றுநோய் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க பல மாநிலங்கள் வியாழக்கிழமை முடிவு செய்தன. மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை கோவிட் அனைத்து தடைகளையும் நீக்குவதாக அறிவித்தன. அதே நேரத்தில் பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவது கட்டாயம் என்ற விதியை முடிவுக்கு கொண்டு வர டெல்லி முடிவு செய்யப்பட்டது.

மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடந்த வாரம் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 24 மாதங்களில், தொற்றுநோயை நிர்வகிப்பதற்கான பல்வேறு அம்சங்களான நோயறிதல், கண்காணிப்பு, தொடர்ந்து தடமறிதல், சிகிச்சை, தடுப்பூசி, மருத்துவமனை உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கான குறிப்பிடத்தக்க திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | குறையும், நீங்கும் நிபந்தனைகள்: இனி மாஸ்க் இல்லாமல் முகம் காணலாம்

கோவிட்-19 பொருத்தமான நடத்தை பொது விழிப்புணர்வை மேற்கோள் காட்டி, மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அவற்றின் திறன்கள் மற்றும் அமைப்புகளை மேம்படுத்துதல், தொற்றுநோயை நிர்வகிப்பதற்கான விரிவான குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்று பல்லா கூறினார், .

“தொற்றுநோயை சமாளிக்க அரசாங்கத்தின் நிலைமை மற்றும் தயார்நிலையின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை கருத்தில் கொண்ட பிறகு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு டிஎம் சட்டத்தின் விதிகளை செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை” என்று அவர் கூறினார்.

2020 மார்ச் 24 அன்று, நாட்டில் கோவிட்-19-ஐ கட்டுப்படுத்தப்பட்ட பேரிடர் மேலாண்மை சட்டம், (டிஎம் சட்டம்) 2005 இன் கீழ் முதல் முறையாக உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மத்திய அரசு வெளியிட்டது. இவை பல்வேறு சந்தர்ப்பங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அடுத்து என்ன?
தற்போதுள்ள உத்தரவு மார்ச் 31-ம் தேதி காலாவதியான பிறகு, உள்துறை அமைச்சகத்தால் எந்த உத்தரவு பிறப்பிக்கப்படாது என்று பல்லா கூறினார்.

எனினும், கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய ஆலோசனைகள் தொற்றுநோய்க்கான ஒட்டுமொத்த தேசிய நடைமுறைகளை தொடர்ந்து வழிநடத்தும் என்றும் அவர் கூறினார். வழிகாட்டுதல்களில் முகக்கவசங்களின் பயன்பாடு மற்றும் பொது சுகாதாரம் ஆகியவையும் அடங்கும்.

மேலும் படிக்க | கொரோனா நான்காவது அலை: வீரியம் மிக்க ஓமிக்ரான் வைரசால் ஹாங்காங்கில் நான்காவது கோவிட் அலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.

முகநூலில் @ZEETamilNewsடிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிகிராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G
ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.