உலகம்

இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் 1000 மடங்கு அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்


படிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: ‘உலகம் முழுவதும் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு தாக்குதல்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன’ என, அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த வட அமெரிக்க இந்துக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று முன்தினம் வாஷிங்டனில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற, ‘நெட்வொர்க் தொற்று ஆராய்ச்சி நிறுவனம்’ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை அறிவியல் அதிகாரி ஜோயல் ஃபிங்கெல்ஸ்டீன் கூறியதாவது:உலகம் முழுவதும் நடக்கும் மத மோதல்கள் குறித்து, எங்கள் அமைப்பு ஆய்வு நடத்தியது. இதில், ‘ஹிந்துபோபியா’ எனப்படும் இந்துக்களுக்கு எதிரான மனப்பான்மை தற்போது உலகம் முழுவதும் பரவி இருப்பது தெரியவந்துள்ளது.

சமீபத்திய தமிழ் செய்திகள்

சமீபகாலமாக அமெரிக்காவிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. சமூக வலைதளங்களிலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 1,000 மடங்கு அதிகரித்துள்ளது.

அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., புள்ளி விவரப்படி, 2020ல், அமெரிக்காவில் மட்டும், இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு சம்பவங்கள், 500 மடங்கு அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்

விளம்பரம்Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.