Sports

இந்திய யு-19 அணியில் ராகுல் திராவிட் மகன் சமித் திராவிட்! | ராகுல் டிராவிட் மகன் சமித் ஆஸ்திரேலியா தொடருக்கான U19 இந்திய அழைப்பைப் பெற்றார்

இந்திய யு-19 அணியில் ராகுல் திராவிட் மகன் சமித் திராவிட்! | ராகுல் டிராவிட் மகன் சமித் ஆஸ்திரேலியா தொடருக்கான U19 இந்திய அழைப்பைப் பெற்றார்


புது டெல்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்திய அணியின் சுவர், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிடின் மகன் சமித் திராவிட் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதுவும் அவர் ஆடும் அறிமுகப் போட்டியே ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக, இந்தியா யு-19 அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு நாள் போட்டிகளிலும் ஆடுகிறது. புதுச்சேரியில் 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகின்றன. சென்னையில் 4 நாட்கள் போட்டி நடைபெறுகிறது. 18 வயதான சமித் திராவிட் ஒரு ஆல்ரவுண்டர், இவர் சமீபத்தில் மகாராஜா டிராபியில் ஒரு ஸ்டேனிங் சிக்ஸ் அடித்ததற்காக பரவலாக கவன ஈர்ப்புப் பெற்றார்.

இந்தியா யு-19 ஒரு அணியின் கேப்டனாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மொகம்மட் அமான் நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஒருநாள் போட்டிகள் புதுச்சேரியில் செப்டம்பர் 21, 23, 26 ஆகிய தேதிகளில் நடக்கிறது. பிறகு சென்னையில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7-ம் தேதிகளில் 2 நான்கு நாள் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த 4 நாட்கள் போட்டிக்கான இந்திய யு-19 அணிக்கு மத்தியப் பிரதேசத்தின் சோஹாம் பட்வர்தன் கேப்டனாக இருப்பார்.

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சமித் திராவிட் பெங்களூருவில் நடைபெறும் மகாராஜா டிராபி தொடரில் மைசூரு வாரியர்ஸ் அணிக்கு ஆடுகிறார். மகாராஜா டிராபியில் சமித் திராவிட்டிற்கு பெரிய திறப்பு கிடைக்கவில்லை எனினும் யு-19 அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக சோபிக்க அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *