
கொழும்பு: இலங்கையின் யாழ்பாணம் பகுதியில் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையும் நமது நாடும் கையெழுத்திட்டுள்ளன.
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அண்டை நாடான இலங்கைக்கு சென்றுள்ள நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 18வது பிம்ஸ்டெக் அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் கூறியதாவது: இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் என அனைத்து துறைகளிலும் பிம்ஸ்டெக் அமைப்பு இணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, எரிசக்தி, போக்குவரத்து மற்றும் கடலோர பாதுகாப்பு ஆகியவற்றில், கூட்டுறவு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். பயங்கரவாதம் மற்றும் வன்முறையை எதிர்க்க உறுப்பு நாடுகள் ஒன்றுபட வேண்டும்.
இலங்கையின் கண்டியில் உள்ள வைத்தியசாலையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து அறுவை சிகிச்சைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உள்ளன. இந்த சோகமான செய்தியைக் கேட்டதும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதர் கோபால் பக்லேவைத் தொடர்பு கொண்டு, இந்தியா எப்படி உதவ முடியும் என்று கேட்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கை இடையே மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் முன்னிலையில் இந்திய அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இது தவிர, கடலோர காவல்படைக்கான ஒருங்கிணைந்த மீட்பு மையம் அமைப்பது, இலங்கையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது, இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் ‘டிஜிட்டல்’ அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவது போன்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும், இலங்கையின் காலே மாவட்டத்தில் உள்ள 200 பள்ளிகளில் கணினி மையம், இலங்கையில் வெளிநாட்டு சேவையாளர்களுக்கான பயிற்சி மையம் மற்றும் சர்வதேச தூதரக பயிற்சி மையம் அமைக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.