தேசியம்

இந்தியாவில் 5G: விரைவில் 5ஜி இணைய சேவை பெற உள்ள 13 நகரங்கள்..!!


இந்திய இணைய பயனர்களின் நீண்ட காத்திருப்பு 2022 ஆம் ஆண்டு முடிவடைகிறது. புத்தாண்டில் 5G சேவைகள் நடைமுறைக்கு வரும் என்பதை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் இருவரும் 5G நடைமுறைப்படுத்தப்படுவதை அவளுடன் எதிர்பார்த்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் பல 5G ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 5ஜி அறிமுகத்தை தொடர்ந்து, அடுத்த தலைமுறை இணைய சேவையின் மின்னல் வேக திறன்களை பயனர்கள் அனுபவிக்க முடியும்.

தொலைத்தொடர்புத் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் ஆண்டில் இந்தியா 5G அறிமுகத்திற்குத் தயாராக உள்ளது என்பதை உறுதிப்படுத்தியது. மேலும், 5G சேவைகளை முதலில் பெறும் நகரங்களின் பட்டியலைப் பற்றியும் DOT தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் | உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு நீதிபதியை உருவாக்கியுள்ளது சீனா..!!

DoT நிதி உதவியுடன், IIT பாம்பே,IIT டெல்லி, IIT ஹைதராபாத், IIT மெட்ராஸ், IIT கான்பூர், IISC பெங்களூர், SAMEER மற்றும் CEWiT, போன்ற 8 ஏஜென்சிகள் செயல்படுத்தப்பட்டு வரும் “உள்நாட்டு 5ஜி சோதனை திட்டம்”, இறுதி கட்டத்தில் உள்ளது. .சுமார் 224 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் டிசம்பர் 31, 2021க்குள் முடிவடையும் என்று DoT உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் | உலகில் முதல் முறையாக…. ; 2021ஆம் ஆண்டு வியப்பில் ஆழ்த்திய ‘5’ சம்பவங்கள்

5ஜி அறிமுகத்தின் முதல் கட்டத்தில் சில நகரங்கள் 5G சேவைகளைப் பெற உள்ளன

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் (TSP) பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை 5ஜி சேவைகளை வழங்குவதற்காக 5ஜி சோதனை தளங்களை நிறுவியுள்ளதாக DoT தெரிவித்துள்ளது. இவை 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 13 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்கண்ட மெட்ரோ மற்றும் பெரிய நகரங்கள் 2022 ஆம் ஆண்டில் 5G சேவைகள் முதலில் பெறப்படுகின்றன:

1. சென்னை

2. குருகிராம்

3. பெங்களூர்

4. கொல்கத்தா

5. மும்பை

6. சண்டிகர்

7. டெல்லி

8. ஜாம்நகர்

9. அகமதாபாத்

10. ஹைதராபாத்

11. லக்னோ

12. புனே

13. காந்தி நகர்

மேலும் படிக்கவும் | Aliens: வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.

முகநூலில் @ZeeHindustan Tamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *