உலகம்

இந்தியாவில் செயல்பாடு: திருமூர்த்தி பெருமிதம் கொள்கிறார்


நியூயார்க்: ”ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், தற்காலிக உறுப்பினராக, இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது,” என, ஐ.நா.,வுக்கான, இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி, திருமூர்த்தி கூறினார்.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான ஐநாவின் மிகவும் சக்திவாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 15 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சிலில் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் தவிர, இந்தியா உட்பட 10 நாடுகள் இடைக்கால உறுப்பினர்களாக உள்ளன. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இந்தியா இருந்தது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக இருப்பது குறித்து திருமூர்த்தி கூறியதாவது:
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் செயல்பாடு கடந்த ஓராண்டாக குறிப்பிடத்தக்கது. செயல்பாடுகளைப் பார்க்கும்போது, ​​பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று உலகின் பல நாடுகள் எதிர்பார்க்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *