Sports

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை சமனில் முடித்தது நியூஸி. | New Zealand draws t20i series against england

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை சமனில் முடித்தது நியூஸி. | New Zealand draws t20i series against england


நாட்டிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 2-2 என சமனில் முடித்தது.

நாட்டிங்காமில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோ 41 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசினார். லியாம் லிவிங்ஸ்டன் 26, டேவிட் மலான் 26 ரன்கள் சேர்த்தனர். ஹாரி புரூக் 4, மொயின் அலி 1 ரன்களில் நடையை கட்டினர். நியூஸிலாந்து தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 3, இஷ் சோதி 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

176 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 17.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிம் ஷெய்பர்ட் 48, கிளென் பிலிப்ஸ் 42, மார்க் சாப்மேன் 40, ரச்சின் ரவீந்திரா 17, ஃபின் ஆலன் 16, டேரில் மிட்செல் 14 ரன்கள் சேர்த்தனர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-2 என சமனில் முடித்துகோப்பையை இங்கிலாந்து அணியுடன் பகிர்ந்து கொண்டது. முதல் இரு ஆட்டங்களிலும் நியூஸிலாந்துஅணி தோல்வி அடைந்த நிலையில்அதில் இருந்து மீண்டுவந்து தொடரை சமனில் முடித்துள்ளது.

டி20 கிரிக்கெட் தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் நாளை (8-ம் தேதி) கார்டிப் நகரில் நடைபெறுகிறது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *