Sports

”ஆஸ்திரேலியத் தொடர் தேவையற்றது” – இந்திய அணியின் பணிச்சுமை குறித்து வாசிம் அக்ரம் | Australian series is unnecessary – Wasim Akram on Indian teams workload

”ஆஸ்திரேலியத் தொடர் தேவையற்றது” – இந்திய அணியின் பணிச்சுமை குறித்து வாசிம் அக்ரம் | Australian series is unnecessary – Wasim Akram on Indian teams workload


மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியின் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “உலகக்கோப்பைக்கு முன்னதாக, இந்தியா ஆஸ்திரேலியாவுடன் விளையாடுவது என்பது தேவையற்றது. இந்திய வீரர்களுக்கு இது கூடுதல் சோர்வை தரும். ஆகஸ்ட்டில் இருந்து இந்திய அணி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறது. உலகக்கோப்பைக்கும் ஆஸ்திரேலிய தொடருக்கும் இடையே இந்திய வீரர்களுக்கு சிறிது நேரமே ஓய்வு எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

எனவேதான் ஆஸ்திரேலியே தொடரில் இந்திய அணி பங்கேற்பது சிறந்ததாக அமையாது. உலகக்கோப்பை ஆட்டங்களில் விளையாட இந்திய அணி வெவ்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். பயணம் செய்யவே ஒருநாள் ஆகிவிடும். இதனால் உலகக்கோப்பையில் பங்கேற்ப ஆற்றலுடன் இருப்பது முக்கியம். இப்படியான சூழலில் ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது ஏன் எனத் தெரியவில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.





Source link

About Author

tamilnewspapper.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: