
வாஷிங்டன்: ‘அக்வாமேன்’ முதல் பாகம் வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ‘அக்வாமேன் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
டிசி யுனிவர்ஸின் ‘அக்வாமேன்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்’ ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகவுள்ளது. இதில் ஜாசன் மோமா, யஹ்யா அப்துல் மதீன், நிக்கோல் கிட்மேன், பாட்ரிக் வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 21 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – ஜாசன் மோமா குரலில் தொடங்கும் ட்ரெய்லரில், கணவனாக, தந்தையாக ஆழ்கடல் நகரமான அட்லான்டிஸின் அரசனாக இருக்கிறார் ஆர்தர் கர்ரி/அக்வாமேன். சென்ற பாகத்தில் ப்ளாக் மான்டிஸ் என்ற பெயரில் அக்வாமேனால் வீழ்த்தப்பட்ட வில்லன், தற்போது ‘ப்ளாக் ட்ரைடென்ட்’ என்ற பெயரில் புதிய அவதாரத்தில் வருகிறார். இந்த முறை அக்வாமேனுடன் முதல் பாகத்தின் வில்லன் ஓஷன் மாஸ்டரும் சேர்ந்து புதிய வில்லனை வீழ்த்த தயாராகிறார். ஜானி டெப் பிரச்சினையில் சிக்கிய ஆம்பர் ஹெர்டு ட்ரெய்லரில் இரண்டு நொடிகள் மட்டுமே காட்டப்படுகிறார். ‘அக்வாமேன் 2’ ட்ரெய்லர் வீடியோ: