
இது Xiaomiயின் துணை நிறுவனமாகும். ஃபெமா (அந்நிய செலாவணி நிர்வாகச் சட்டம்) சட்டம், 1999-ன் கீழ் அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சட்டத் திட்டங்களை மீறி முறைகேடாக பணம் செலுத்தியதாக Xiaomi மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த இந்த நிறுவனத்தின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மே மாதம் எல்லாம் மாறப்போகிறது.. புதிய விதிகள் அமலுக்கு!!
இந்தியாவில் இருந்து சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பணம் அனுப்பும் போது அந்த நிறுவனம் வங்கிகளுக்கு தவறான விவரங்களை அளித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சியோமி உள்ளிட்ட மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ராயல்டி என்ற பெயரில் ரூ.5,551.27 கோடி அன்னியச் செலாவணியை அந்நிறுவனம் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.