
வெளியிடப்பட்டது: 30 மார்ச் 2022 07:51 am
புதுப்பிக்கப்பட்டது: 30 மார்ச் 2022 07:51 am
வெளியிடப்பட்டது: 30 மார்ச் 2022 07:51 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 30 மார்ச் 2022 07:51 AM

காபூல்: ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்தனர். கடந்த முறை போல் இல்லாமல் பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்குவதாக ஆரம்பத்தில் உறுதியளித்தனர்.
ஆனால் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெரும்பாலான பகுதிகளில் பெண்கள் 6ம் வகுப்பிற்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வியாண்டு கடந்த புதன்கிழமை தொடங்கியது. அப்போது தடை நீக்கப்படும் என பலரும் எதிர்பார்த்தனர். இதற்கு மாறாக, தாலிபான்கள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் பெண்களுக்கான தடையை நீட்டித்தது.
மேலும் கடந்த சில நாட்களாக பல்வேறு சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்தனர். அதன்படி, ஆண் உறவினர் இல்லாமல் பெண்கள் விமானங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாரம்பரியமிக்க தலைப்பாகை, தாடி இல்லாத அரசு ஆண் ஊழியர்கள் வீட்டுக்கு செல்ல நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது. சர்வதேச ஊடகங்களும் ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன. இது அடக்குமுறை நடவடிக்கை என ஐ.நா.