தேசியம்

ஆதார்: ஒரு நபர் இறந்த பிறகு அவருடைய ஆதார் எண் ரத்தாகுமா; அரசு கூறுவது என்ன .. !!!


ஆதார் சமீபத்திய செய்திகள்: ஆதார் அட்டை நம் வாழ்வின் இன்றியமையாத வகையில் மாறிவிட்டது. இது இல்லை என்றால், நமது பல பணிகள் நிறைவேற்ற முடியாமல் நின்று விடும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, அரசு திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வது அல்லது பயன்படுத்துவதைத் தடுப்பூசி பெறுவது எதுவாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் ஆதார் தேவை. வீடு வாங்குவது முதல் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பெறுவது வரை அதிக வங்கி செயல்பாடுகள் என அனைத்திற்கும் ஆதார் அவசியம்.

நபர் இறந்த பிறகு ஆதார் என்னவாகும் என்ற இந்த கேள்விக்கான பதிலை மக்களவையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்துள்ளார். ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு, அவருடைய ஆதார் செயலிழக்கச் செய்யப்படாது என கூறப்படுகிறது.

தற்போது இறந்தவரின் ஆதார் எண்ணை ரத்து செய்ய எந்த முறையையும் பின்பற்றவில்லை என்று சந்திரசேகர் கூறினார். எனினும், அவர் மக்களவையில், UIDAI -யின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969 -ன் வரைவு திருத்தங்கள் குறித்த ஆலோசனைகளைக் கோரியுள்ளார். இறப்பு சான்றிதழ் வழங்கும் போது ஆதாரை பெற முடியும் என்பது தொடர்பான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்

இறப்பு சான்றிதழுடன் ஆதார் இணைத்தல்
தற்போது, ​​பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பிறப்பு மற்றும் இறப்பு புள்ளிவிவரங்கள் தொடர்பான தரவுகளை பாதுகாத்து வைக்கும் நபராக உள்ளது. இறந்த நபர்களின் ஆதார் எண்ணை, டீஆக்டிவேட் செய்வதற்கான, அதாவது செயலிழக்கச் செய்வதற்கான எந்த வழிமுறையும் தற்போது இல்லை. ஆனால் பதிவாளர் மற்றும் UIDAI இடையே ஆதார் எண்ணைப் பகிர்வதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டவுடன், பதிவாளர் அதை டீஅக்டிவேட் செய்ய இறந்தவரின் ஆதார் எண்ணை UIDAI உடன் பகிரத் தொடங்கலாம். ஆதாரை செயலிழக்கச் செய்வது அல்லது அதன் இறப்புச் சான்றிதழ் இணைப்பது ஆதார் உரிமையாளர் இறந்த பிறகு, அவருடைய எண் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும்.

கடந்த மாதம், UIDAI உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை, உங்கள் வீட்டில் தபால்காரர் மூலம் புதுப்பிப்பதற்கான வாய்ப்பை அறிமுகப்படுத்தியது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களின் தொலைபேசி எண்களை புதுப்பிக்க தபால்காரர்களை அனுமதிக்க இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் UIDAI ஏற்பாடுகளை செய்துள்ளது.

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *