தேசியம்

ஆட்டோ கட்டணத்தில் ஜிஎஸ்டி: ஜனவரி 1ம் தேதி Ola-Uber கட்டணங்கள் உயருகின்றன..!!


புதுடெல்லி: வரும் புத்தாண்டில், அதாவது ஜனவரி 1 ஆம் தேதி முதல், பல சேவைகள் மற்றும் பொருட்களுக்கான வரி (ஜிஎஸ்டி) ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது. இதுவரை ஜிஎஸ்டி வரி வரம்பிற்கு வெளியே இருந்த சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிதாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.

அந்த வகையில், Ola அல்லது Uber போன்ற செயலியின் அடிப்படை ஆன்லைன் புக்கிங் சேவை பெற வாடிக்கையாளர்கள் அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி தொடர்பாக பல முடிவுகள் எடுக்கப்பட்டது. உதாரணமாக, 1000 ரூபாய்க்கு குறைவான ஆயத்த ஆடைகள் மற்றும் காலணிகளுக்கு ஜிஎஸ்டி (ஜிஎஸ்டி ஆயத்த ஆடைகள் மற்றும் காலணிகள்) 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஆன்லைன் உணவு ஆர்டருக்கான வரி (ஆன்லைன் உணவு ஆர்டரில் GST) இப்போது உணவகத்திற்கு பதிலாக டெலிவரி சேவை வழங்குநரிடமிருந்து வசூலிக்கப்படும். இது தவிர, செயலிஅடிப்படையிலான கேப் சேவை வழங்குநர்கள் மூலம் முன்பதிவு செய்யப்படும் ஆட்டோக்களின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி (ஆட்டோ கட்டணத்தில் ஜிஎஸ்டி) தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் | டிசம்பர் 31-க்குள் இந்த பணிகளை செய்து முடிக்கவும்: இல்லையெனில், வீண் பண விரயம்

இருப்பினும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவு சாதாரண ஆட்டோக்களின் கட்டணத்தை பாதிக்காது, ஏனெனில் அவை தற்போது வரை ஜிஎஸ்டி வரம்பிற்கு வெளியே உள்ளன. செயலியில் இருந்து ஆட்டோக்களை முன்பதிவு செய்யும் பயணிகளை அரசாங்கம் பிரிமியம் பிரிவில் வைத்திருப்பதால், செயலி அடிப்படையிலான டாக்ஸிகளுடன், செயலியிலான ஆட்டோக்களும் ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டு வரப்படுகின்றன.

அரசின் இந்த முடிவு சாமானியர்களின் ஆட்டோ கட்டண சுமையை அதிகரிக்கலாம். ஆட்டோ ஓட்டுனர்களின் கட்டண கொள்ளையில் இருந்து தப்பவே, வாடிக்கையாளர்கள் ஆன்லைனில், செயலி அடிப்படையிலான ஓலா-ஊபர் ஆட்டோக்களை முன்பதிவு செய்ய விரும்புகின்றனர். ஆனால் இந்த முடிவிற்குப் பிறகு, இப்போது இந்த முன்பதிவு செய்ய முன்பை விட ஐந்து சதவிகிதம் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

மேலும், ஆம்னி பஸ் முன்பதிவில், ஏ.சி. பஸ்களுக்கு மட்டும் ஏற்கனவே 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டது. இனி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களுக்கான ஆன்லைன் முன்பதிவிற்கும் புதிதாக ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் | ITR தாக்கல்: இவர்கள் ITR தாக்கல் செய்ய வேண்டாம், நிபந்தனைகளும் விதிமுறைகளும் இவைதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.

முகநூலில் @ZeeHindustan Tamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *