
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா (70) பெங்களூரு வடக்கு தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தகவல் வெளியானது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் டெல்லி சென்றுபாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது வயது முதிர்வு காரணமாக வரும்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது கடினம் என தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சதானந்த கவுடா பெங்களூருவில் நேற்று கூறும்போது, ‘‘பாஜக மேலிடம் என் மீது நம்பிக்கை வைத்து கட்சியின் மாநிலத் தலைவர், முதல்வர், மத்திய அமைச்சர் என பல பதவிகளை வழங்கியுள்ளது. அதனால்நான் பாஜகவுக்கு எப்போதும் நன்றியோடு இருப்பேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டதால் அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. அதனால் இந்த ஆண்டுடன் தேர்தல் அரசியலில் இருந்துஓய்வுபெறுகிறேன். இனி வரும்காலங்களில் தேர்தலில் போட்டியிட மாட்டேன். கட்சியின் நலனுக்காக என்னிடம் ஆலோசனைக் கேட்டால் உரிய ஆலோசனை வழங்குவேன்” என்றார்.