
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 06 ஆகஸ்ட், 2022 06:22 AM
வெளியிடப்பட்டது: 06 ஆகஸ்ட் 2022 06:22 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 06 ஆகஸ்ட் 2022 06:22 AM

பெய்ஜிங்: தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கோருகிறது. இந்நிலையில், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2ம் தேதி தைவான் சென்றார். நான்சியின் தைவான் பயணம் சீனாவை கோபப்படுத்தியது. நான்சி பெலோசி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சீனா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாகவும், நான்சி பெலோசியின் வருகை சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அவமதிப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெலோசியின் வருகைக்குப் பிறகு, தைவானின் 6 எல்லைப் பகுதிகள் சீனாவின் முப்படைகளால் சுற்றி வளைக்கப்பட்டன. தைவான் எல்லையில் சீனா ராணுவ ஒத்திகையை தொடங்கியது இந்நிலையில், தைவான் எல்லையை சுற்றி 100 சீன போர் விமானங்களும், 10 போர்க்கப்பல்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக சீனா நேற்று அறிவித்தது.
வியாழக்கிழமை, சீனா தைவான் அருகே மேம்பட்ட ஏவுகணைகளின் போர் சோதனையை நடத்தியது. 11 பாலிஸ்டிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் அடுத்தடுத்து ஏவப்பட்டன. 7ஆம் தேதி வரை போர் ஒத்திகை நடத்தப் போவதாக சீன ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. தைவானின் பாதுகாப்பிற்காக அமெரிக்க போர்க்கப்பல்களும் தைவானின் கடல் பகுதியில் ரோந்து வருகின்றன.