Sports

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி | யுஎஸ் ஓபன் 2024 QF இல் இகா ஸ்வியாடெக் ஜெசிகா பெகுலாவிடம் தோற்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி | யுஎஸ் ஓபன் 2024 QF இல் இகா ஸ்வியாடெக் ஜெசிகா பெகுலாவிடம் தோற்றார்


நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில்ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஜேக் டிராப்பர் ஆகியோர் அரை இறுதி சுற்றுக்குமுன்னர். அதேவேளையில் மகளிர் பிரிவில் முதல்நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ​​அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர்ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில்முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 5-ம் நிலை வீரரானரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னார் 6-2, 1-6,6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரை சுற்றில் அவர், 25-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜாக்டிராப்பருடன் பலப்பரீட்சை நடத்துகிறார். ஜாக் டிராப்பர், கால் இறுதி சுற்றில் 10-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டினாரை 6-3, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். இதில் இகாஸ்வியாடெக் 2-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா, 22-ம் நிலை வீராங்கனையான பிரேலின் பீட்ரிஸ் ஹடாட் மையாவுடன் மோதினார். இதில் கரோலினா முச்சோவா 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். அரை இறுதி ஆட்டத்தில் ஜெசிகு பெகுலாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார் கரோலினா முச்சோவா.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *