தேசியம்

அதிர்ச்சி தகவல்! PM கிசான் நிதி உதவி பெற்ற 42 லட்சம் தகுதியற்ற பயனாளிகள் .. !!


பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், பிரதமர் மோடி 9 வது தவணையை வெளியிட்ட நிலையில், இந்த திட்டத்தை தவறாகப் பயன்படுத்திய விவசாயிகளிடமிருந்து தொகையை திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக அரசு இப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்னும் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்ட பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது/அடையாளம் காண்பது மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பாகும் என்றார். மேலும் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் தகவல் மாநிலங்கள் மற்றும் யூனியம் பிரதேசங்கள் சரிபார்த்து, தகவல்கள் PM கிசான் போர்ட்டல் பதிவேற்றப்படுகிறது, அதன் பிறகுதான் திட்டத்தின் பணம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது

தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து பணத்தை திரும்ப பெரும் நடவடிக்கை தொடங்கியது. தகுதியற்ற பயனாளிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை மீட்கும் பொறுப்பும் அந்தந்த மாநில அரசுகளிடம் உள்ளது என்றார். பிரதமர் கிசான் யோஜனாவின் 42 லட்சம் தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து 3000 கோடியை மீட்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடவடிக்கை எடுத்து விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பாராளுமன்றத்தில் கூறினார். PM-KISAN திட்டத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றாத விவசாயிகள் இவர்கள் என அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | PM கிசான் சம்மன் நிதி யோஜனா: உங்கள் தவணை கிடைத்துவிட்டதா என அறிவது எப்படி .. !!

சில வரி செலுத்துவோர் உட்பட தகுதியற்ற பயனாளிகள் இத்திட்டத்தின் பயனைப் பெறுவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது என்று விவசாய அமைச்சர் கூறினார். அதேசமயம், விவசாயிகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களாகவே அல்லது அரசு வேலையில் இருப்பவர்கள் என்றாலோ, இந்த திட்டத்தின் கீழ் பலனை பெற தகுதி பெற மாட்டார்கள். குறிப்பிட்ட நபர்களை அடையாளம் கண்ட பிறகு, அந்தந்த மாநிலங்கள், தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து பணத்தை திரும்பப் பெறும் செயல்முறையைத் தொடங்கியுள்ளன. இது தவிர, சரியான விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் பயன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசாங்கத்தால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த தகுதியற்ற விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் உள்ள மாநிலங்கள், அஸ்ஸாம், தமிழ்நாடு, சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் பீகாரில் ஆகும். ரூ. 554.01 கோடி அளவில் அஸ்ஸாமின் 8.35 லட்சம் தகுதியற்ற விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தகுதியற்ற விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட ரூ .340.56 கோடி நிதியும், உத்தரப் பிரதேசத்தின் தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து ரூ. 258.64 கோடியும் திரும்பப் பெறப்படும் என அமைச்சகம் கூறியுள்ளது. பஞ்சாபிலிருந்து சுமார் ரூ .438 கோடியும் மகாராஷ்டிராவில் இருந்து சுமார் ரூ .358 கோடியும் திரும்ப பெறப்படும் என அமைச்சகம் வழங்கப்படுகிறது

திங்களன்று, பிரதமர் நரேந்திர மோடி, கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 9 வது தவணையாக 9.75 கோடிக்கு அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் ரூ .19,500 கோடியை டெபாசிட் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயனாளி விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ .6000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மூன்று தவணைகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ .57 லட்சம் கோடிக்கு அதிகமான அளவில் விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இலவச சமையல் எரிவாயு: இலவச சமையல் எரிவாயு இணைப்பு அறிய வாய்ப்பு! முந்துங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிரவும்

முகநூலில் @ஜீ ஹிந்துஸ்தான் தமிழ் மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பார்க்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டு பதிவிறக்கங்கள்.

ஆண்ட்ராய்ட் இணைப்பு: https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு: https://apple.co/3loQYeR

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *