சென்னை: அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் , ஆதித்யா பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
உண்மைச் சம்பவங்களைத் தழுவி உருவாகும் அதிரடி ஆக் ஷன் படமாக இது உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டலாக நடித்துள்ளார். படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான இதன் டீசர் வரவேற்பைப் பெற்றுள்ளது.