
மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 9 நாட்களில் ரூ.735.02 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாக ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இரண்டாவது நாளில் இப்படம் ரூ.240 கோடி வசூலித்தது. மூன்றாவது நாள் படம் உலக அளவில் ரூ.ரூ.384.69 கோடி வசூலித்தது. 5 நாட்கள் முடிவில் ரூ.574.89 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 9 நாட்களில் ரூ.735.02 கோடியை வசூலித்து மிரட்டி வருகிறது. பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு லாபம் பார்த்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாட்களை முன்னிட்டும், பெரிய படங்கள் எதுவும் போட்டிக்கு இல்லாததாலும் விரைவில் ரூ.1000 கோடியை வசூலிக்கும் எனத் தெரிகிறது.