Cinema

ஃபஹத் ஃபாசில் பிறந்த நாளை முன்னிட்டு ‘வேட்டையன்’ கதாபாத்திர போஸ்டர் வெளியீடு | Fahadh Faasil vettaiyan movie look released by lyca

ஃபஹத் ஃபாசில் பிறந்த நாளை முன்னிட்டு ‘வேட்டையன்’ கதாபாத்திர போஸ்டர் வெளியீடு | Fahadh Faasil vettaiyan movie look released by lyca


சென்னை: ஃபஹத் ஃபாசில் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திர தோற்றத்தை படக்குழு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தவிர, அமிதாப் பச்சன், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ஃபஹத் ஃபாசில் இன்று (ஆக.8) அவரது பிறந்த நாளை கொண்டாடுவதை ஒட்டி இப்படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திர தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

போஸ்டர் எப்படி?: கத்தி, ரத்தம், துப்பாக்கி, தோட்டா என வன்முறைகளைப் படங்களின் சீசனுக்கு நடுவே, இப்படியான ஒரு போஸ்டர் ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும் முன்னதாக வெளியான இப்படத்தின் ரஜினியின் அறிமுக வீடியோ வன்முறையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால், படத்தில் ஃபஹத் கதாபாத்திரம் வித்தியாசமான முறையில் அணுகப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையை இந்த போஸ்டர் விதைக்கிறது. மேலும், ஃபஹத் ஃபாசில், ரஜினி, அமிதாப் பச்சன் நின்றிருக்கும் புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *